இந்திய ரசிகரை தூக்கிக் கொண்டு மைதானத்தில் ஓடிய இலங்கை ரசிகர்: உணர்ச்சி பூர்வமான வீடியோ VIDEO
வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்குபின் இந்திய ரசிகரைவங்கதேசரசிகர்தூக்கிக்கொண்டுஓடியதுதொடர்பான வீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது இத்தொடரில் இலங்கை அணியை இரண்டு முறை வீழ்த்தி நாகினி ஆட்டம் போட்ட வங்கதேசம் அணி, இந்திய அணியை சந்தித்தது.
ஓவராக ஆட்டம் போட்ட வங்கதேச அணியின் மீது இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்திலே இருந்தனர் அதை நேற்றைய போட்டியின் போது மைதானத்தில் காணமுடிந்தது.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது அப்போது இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி, கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற போது, அற்புதமாக சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை தேடித்தந்தார்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய வீரர்கள் மைதானத்தில் வலம் வந்தனர் அந்த நேரத்தின் போது இந்திய ரசிகர் ஒருவரை, இலங்கை ரசிகர் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.
அவர்களது இருவரிடம் இரு நாட்டின் கொடி இருந்தது. இந்த உணர்ச்சி பூர்வமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment