அர்ஜுனா விருது பெற்ற இளம் டென்னிஸ் வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு

பிரபல இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவுமையாஜித் கோஷ் 2 முறை இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் விளையாடி உள்ளார். அர்ஜூனா விருதும் பெற்று உள்ளார்.

கோஷ் மீது 18 வயது பெண் ஒருவர் பர்ஷாத் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார்.

பாதிக்கபட்ட பெண் புகாரில் கூறி இருப்பதாவது.

கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம் அதில் அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து கடந்த 3 வருடங்களில் பல சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்தார். நான் கர்ப்பமாகி கருக்கலைப்பும் செய்து உள்ளேன்.

பின்னர் திருமணம் செய்து கொள்வது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார் என கூறி உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறும் போது "இப்போது என் மகளை அவர் தவிர்க்கிறார், எனவே எங்களுக்கு வேறு வழி இல்லை, அதனால் தான் காவல்த்துறையை நாடினோம் என கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் சமூக ஊடகம் மூலம் சந்தித்து உள்ளனர். கோஷின் வீடு கொலகத்தா சிலிகுரியில் உள்ளது.

பர்ஷாத் போலீஸ் சூப்பிரெண்டு அபிஜித் பானர்ஜி கூறும் போது, புகார் பெறப்பட்டு உள்ளது. அது குறித்த விசாரனையை தொடங்கி உள்ளோம்.

இளைய தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் மீது கற்பழிப்பு, குற்றவியல் சதி குற்றச்சாட்டு, பெண் சம்மதம் மற்றும் மோசடி ,கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இது தானாம்

‘බංගලි පිලේ මැට්ටො කිහිපදෙනෙක් වරදක් කළාට ඉන්දියාවත් එක්ක ජයපැන් බීපු එක දේශපාලන වරදක්..එට්කා අත්සන් කරන්න දැන් ලේසියි’ විමල් වීරවංශ video

රබාඩා එදා ස්මිත්ට අැත්තටම මෙහෙමයි සද්දේ දැම්මේ බලන්නකො බංගලියොන්ට දිපු දඩුවම මොකක්ද කියලා තේරෙයි video